அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கையர்களும் உள்ளடக்கம்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகத்தின் தீர்மானத்தின் பிரகாரம் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளவர்களில் கணிசமான இலங்கையர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்து 45,549 பேரின் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம்
அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை இதில் உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |