வலுக்கும் யோஷிதவின் வழக்கு விவகாரம்: மற்றுமொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல்
யோஷித ராஜபக்ச மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான தனித்தனியான நில பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக மற்றுமொரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி வழக்கு
யோஷித ராஜபக்ச மற்றும் அவரின் பாட்டி ஆகிய இருவர் மீதும் ரத்மலானை மற்றும் தெஹிவளை பகுதிகளில் உள்ள சிரிமல் உயனவில் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்களை ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமாக வாங்கியமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனவரி 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு, சிரிமல் உயனவில் 34.5 பேர்ச் நிலத்தை ரூ. 36 மில்லியனுக்கும் அதிகமாக வாங்கியமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனை தொடரந்து, கடந்த ஜனவரி 27 ஆம் திகதி கொழும்பு கூடுதல் நீதவானால் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 17 மணி நேரம் முன்

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
