1.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் திருட்டு! கனடா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
ஒன்ராறியோ முழுவதும் கார் திருட்டு சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு, திருடப்பட்ட வாகனங்களில் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை யார்க் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வாகனத் திருட்டு
கோவிட் தொற்றுநோய்களின் போது கார் கடத்தல்கள் ஒன்ராறியோவில் அதிகரித்துள்ளன.
கார் கடத்தல்களின் அதிகரிப்பு பற்றிய விசாரணையின் பின்னர், பொலிஸார் பலரை கைது செய்து 100 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இந்த மே மாதம், 2017 ஆம் ஆண்டிலிருந்து வாகனத் திருட்டுகளின் எண்ணிக்கை 81 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும்,
2019 மற்றும் 2020 க்கு இடையில் கார் திருட்டுகள் குறிப்பாக 39 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், ரொறொன்ரோ பொலிஸார் பல இளைஞர்களை GTA இல் கார் திருட்டுகள் தொடர்பாக கைது செய்தனர்.
கைது நடவடிக்கை
அக்டோபர் 11 மற்றும் அக்டோபர் 12 ஆம் திகதிகளில், புலனாய்வாளர்கள் GTA முழுவதும் பல தேடுதல் வாரண்டுகளை செயல்படுத்தி 16 பேரை கைது செய்து 116 குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான 19 திருடப்பட்ட வாகனங்களையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளதாகவும், மேலும் 5 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 50 திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றின் வாகன அடையாள எண்கள் மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கார்களில் சில "சந்தேகத்திற்கு இடமில்லாத வாங்குபவர்களுக்கு" விற்கப்பட்டதாக தாங்கள் நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிராம்ப்டனைச் சேர்ந்த 21 வயதுடைய ஆயுப் அப்டி எனற் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை உடைமையாக வைத்திருந்த 6 குற்றச்சாட்டுகள் உட்பட 34 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ரொறன்ரோவைச் சேர்ந்த 19 வயதான லெனாக்ஸ் கிரான்ட், விசாரணையின் போது கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபர் ஆவார்.
அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதாக பொலிஸார் கூறியதை அடுத்து. பிராம்ப்டனைச் சேர்ந்த 30 வயதான ஆதவன் முருகேசப்பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.