சர்ச்சையாகிய பாடல் வரிகள்! யொஹானிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

London United Kingdom World
By Independent Writer Feb 23, 2025 11:06 PM GMT
Report

பாடகி யொஹானி நடத்திய நிகழ்ச்சியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை எதிர்த்து லண்டனில் உள்ள செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவின் மகளான யொஹானி பலமுறை அவரை “வீரன்” என புகழ்ந்துள்ளார். இவரது “Rawwath Dasin” எனும் பாடலில் இராணுவத் தளவாட உடை அணிந்து “நீங்கள் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடினீர்கள். நீங்கள் எனது வீரன், என பாராட்டி பாடியுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் இராணுவ வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதில் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா தலைமையிலான 55ஆவது படைப்பிரிவு முக்கியப் பங்கு வகித்தது என ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.

ஹமாஸ் போராளிக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பணய கைதி!

ஹமாஸ் போராளிக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பணய கைதி!

அமெரிக்க தடை

ஜனவரி 29 முதல் பெப்ரவரி 4, 2009 வரை வன்னியில் உள்ள மருத்துவமனை தினமும் படையால் தாக்கப்பட்டதற்கு 55ஆவது படைப்பிரிவே பொறுப்பாக இருக்கலாம் என எதிர்பாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யொஹானி , அமெரிக்கா நுழையத் தடைசெய்யப்பட்ட ஷவேந்திர சில்வா மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரோடு நட்புடன் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்ச்சையாகிய பாடல் வரிகள்! யொஹானிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் | Yohani S Controversial Song

இந்நிலையில் யொஹானி தற்போது பல நிகழ்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 21) நடந்த நிகழ்ச்சிக்கு எதிராக நடைபெற்றுள்ளது.

ஒரு இனப்படுகொலையை ஆதரிப்பவரும், இனப்படுகொலை செய்பவர்களை புகழ்பவரும் எங்கும், குறிப்பாக லண்டனில், நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது,” என்று தமிழ் இளைஞர் அமைப்பான TYO UKவின் அரசியல் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பணய கைதி!

ஹமாஸ் போராளிக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பணய கைதி!

யொஹானியின் நிகழ்ச்சி

யொஹானி தனது தந்தையின் குற்றங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்க வேண்டும். இனப்படுகொலை செய்தவர்களை ஆதரித்ததற்காக மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று MSDTE ஒருங்கிணைப்பாளர் எஸ். யோகலிங்கம் கூறியுள்ளார்.

சர்ச்சையாகிய பாடல் வரிகள்! யொஹானிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் | Yohani S Controversial Song

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற Harley Lounge என்ற கட்டடம் தமிழருக்கு சொந்தமானது என  ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.

மேலும், யொஹானியின் பின்னணி பற்றி முன்பே தெரியவில்லை என்றும், அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இல்லை என்றும் கட்டடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளதாக  ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் யொஹானியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் “Outright Play” மற்றும் “Nesan Creations” எனும் நிறுவனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதில் “Nesan Creations என்பது தமிழர் ஒருவரின்  நிறுவனம் என்றும் அவர் EROS இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவராக இருக்கிறார் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.

மேலதிக தகவல் - கஜி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US