ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! சிறீதரன் இரங்கல்

Tamils S. Sritharan Sri Lanka
By Rakesh Dec 30, 2024 01:16 AM GMT
Report

ஈழ மண்ணின் மூத்த படைப்பு இலக்கியவாதியும், கிளிநொச்சி மண்ணுக்கு அடையாளம் தந்தவருமாகிய மதிப்பார்ந்த நா.யோகேந்திரநாதன் மறைந்தார் என்ற செய்தி மனதை நொருங்கச் செய்திருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யோகேந்திரநாதனின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பழமையான மொழி தமிழ்: இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ்: இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

உணர்வுகளில் நிறைந்த மனிதன்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! சிறீதரன் இரங்கல் | Yogendranathan Passed Away Sritharan Condolence

"அகவை மூப்பையும் அதனால் அவர் உற்றிருந்த நோய் உபாதைகளையும் கடந்தும் தமிழ்த் தேசியப் பயணப் பாதைகளை தன் படைப்புகள் ஊடாக வெளிக்கொணர வேண்டும் என்ற பேரவாவில் எழுத்துலகில் இயங்கிக்கொண்டே இருந்த ஈழத்தின் புகழ்பூத்த பேராளுமையான அவர், ஈழவிடுதலைப் போர் குறித்த அனுபவங்களையும், ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த ஈழத்தின் அடையாள மனிதனாகவுமே இறுதி வரை இருந்தார்.

போராட்ட காலத்தில் வானொலியில் ஒலிபரப்பான நா.யோகேந்திரநாதனின் 'உயிர்த்தெழுகை' நாடகம் ஈழ உணர்வாளர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை மேலுயர்த்தி, எமது மக்களின் உணர்வுகளில் நிறைந்த மனிதனாக அவரை மாற்றியிருந்தது.

இன விடுதலை என்ற சத்திய இலட்சியத்தை தன் இதயத்தே சுமந்த ஓர் பேனாமுனைப் போராளியாக விடுதலைப் போராட்ட காலத்தில் எத்தனை வீரியத்தோடு அரசியல், நாடக, வானொலித் துறை சார்ந்து இயங்கினாரோ, அதே வீரியத்தையும், விவேகத்தையும் படைப்பு இலக்கியம் எனும் துறைக்குள் ஒருசேர இணைத்து, புனைவுகள் அற்ற போரியல் ஆவணங்களாக தன் படைப்புகளை வெளிக்கொணர்ந்த வண்ணமிருந்த அவரின் எழுத்துலகப் பணி, ஒரு விடுதலைப் போராளியின் ஆத்ம தாகம் நிறைந்த காலப் பெரும் பணியாகவே இருந்தது.

அமெரிக்காவில் அவசர உதவி எண்ணிற்கு 17 முறை அழைத்த நபர் கைது

அமெரிக்காவில் அவசர உதவி எண்ணிற்கு 17 முறை அழைத்த நபர் கைது

மீளாத துயர்

நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் தொடர்களின் வெளியீட்டின் பின்னர் நோயுற்றிருந்த அவர் அதிலிருந்து ஓரளவு மீண்டெழுந்த பின்னர், உலகப் போரியலின் வரலாற்றுத் திருப்புமுனையான 'குடாரப்புத் தரையிறக்கம்' குறித்துப் பேசும் 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்னும் வரலாற்று நாவலை எழுதி வெளியிட்ட நிறைவில் இருந்து நாம் இன்னும் மீளாத நிலையில் அவர் மறைந்தார் என்ற செய்தி மனத்துயரைத் தந்திருக்கின்றது.

ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! சிறீதரன் இரங்கல் | Yogendranathan Passed Away Sritharan Condolence

ஒரு படைப்பாளன் தன் படைப்புகளின் வழி காலம் உள்ளவரை வாழ்வான் என்பது எத்துணை உண்மையோ, காலம் எம் மண்ணில் உற்பவித்த விடுதலைப் போராளி ஐயா யோகேந்திரநாதனும் தமிழ்த் தேசியத்தின் அழியா முகமாக என்றும் எம் நெஞ்சங்களில் நிறைந்தே இருப்பார்.

இலட்சியப் பற்றுறுதி மிக்க, எமது மண்ணின் முதுபெரும் ஆளுமை 'மாமனிதர்' யோகேந்திரநாதனுக்கு எமது புகழ் வணக்கம். அவரின் ஆத்மா அமைதி பெறவும், இழப்பின் வலி சுமந்திருக்கும் அவரது குடும்பத்தினர் இந்தத் துயரிலிருந்து மீளவும் எனது பிரார்த்தனைகளும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US