15 அம்சத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஹமாஸ் கோரிக்கை!
காசா அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கான 15 அம்சத் திட்டத்திற்கு தொடர்ந்து கட்டுப்பட்டிருப்பதாகப் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது 'டெலிகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தங்களின் தற்போதைய முதன்மை நோக்கம் என்றும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
காசாவின் எல்லை திறப்பு
பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என கோரியுள்ளது.
காசா பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாகப் பின்வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

காசாவிற்கான எல்லைகளைத் திறந்து, மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மீள்கட்டமைப்புப் பொருட்களை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளது.
அமைதிச் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் ஏற்படும் எந்தவொரு விதிமீறல்களையும் அல்லது குளறுபடிகளையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு இடைத்தரகர்களுக்கும், உத்தரவாதம் அளித்த நாடுகளுக்கும் உள்ளது என ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
எங்கள் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதை உறுதிசெய்யும் வகையில், இந்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த நேர்மறையாகவும் பொறுப்புணர்வுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என்று ஹமாஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.