நேற்றைய கொரோனா இறப்புக்களும், அதற்கான காரணங்களும்
நேற்றைய தினம் இலங்கையில் உயிரிழந்த 8 பேரினது முழுமையான தகவல்களும் வெளியாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் இதனை உறுதி செய்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின் இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன் குறித்த நிலையத்தில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாணந்துறைப் பிரதேசத்தை வதிவிடமாகக் கொன்ட 67 வயதுடைய பெண் ஒருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2021ஆம் ஆன்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் 19 நிமோனியாவே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியூமோனியா மற்றும் மோசமடைந்த இதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 90 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுக் காரணமாக மூளையில் ஏற்பட்ட குருதிப்பெருக்கு மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொரட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் 19 தொற்றால் இதயம் செயலிழந்தமை, மோசமடைந்த நீரிழிவு மற்றும உயர் குருதியழுத்தம் மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 43 வயதுடைய பெண் ஒருவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி உயரிழந்துள்ளார்.
கொவிட் நியூமோனியா மற்றும் குருதி நஞ்சாதல் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய்ந்தமருது 12 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
குருதி நஞ்சாதலால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கொவிட் நியூமோனியா, இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய பெண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, குருதி நஞ்சாதலால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இதயநோய் நிலையே நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.







திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
