ஏமன் போர்: பாடசாலையை விட்டு இடைவிலகும் சிறுவர்கள்
ஏமனில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர், அந்நாட்டுச் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஏமனில் தற்போது சுமார் 3.2 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை இழந்துள்ளதாகவும், 1.5 மில்லியன் இடம்பெயர்ந்த சிறுவர்கள் நிரந்தரமாகக் கல்வியைக் கைவிடும் அபாயத்தில் உள்ளதாகவும் யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது.
போர் காரணமாக நாட்டின் பொருளாதாரம் 250 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், வேலையில்லாத் திண்டாட்டம் 35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பொருளாதாரச் சிக்கல்
பட்டதாரிகளே வேலையின்றித் தவிக்கும் நிலையில், "கல்வி என்பது வீண் செலவு" என்ற மனநிலை பல பெற்றோரிடையே உருவாகியுள்ளது.

இருப்பினும், சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது அவர்களது எதிர்காலத்தைச் சிதைப்பதுடன், சமூகத்தில் நீண்டகாலப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கும் என சமூகவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam