உக்ரைன் மீது ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதல்: 16 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று(15.4.2026) இரவு நடத்திய சரமாரி ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் சிறுவன் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில், நேற்று ஒரே நாளில் மட்டும் 659 ட்ரோன்கள் மற்றும் 44 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானவற்றை உக்ரைன் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்திய போதிலும், குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது விழுந்த ஏவுகணைத் துண்டுகளால் பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
போர்நிறுத்தம்
குறிப்பாக, தெற்குத் துறைமுக நகரான ஒடேசாவில் (Odesa) 9 பேரும், தலைநகர் கிய்வில் (Kyiv) ஒரு சிறுவன் உட்பட 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 32 மணிநேர ஈஸ்டர் பண்டிகை போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கிய்வில் உள்ள ஹோட்டல்கள், அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்ததோடு, மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை
இதேவேளை, ரஷ்யாவின் துவாப்சே (Tuapse) துறைமுக நகர் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா முயன்ற போதிலும், பிராந்திய எல்லைகள் தொடர்பான முரண்பாடுகள் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக அவை தோல்வியில் முடிந்துள்ளன.
ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri