ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்
மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரான் முன்வைத்துள்ள முன்மொழிவுகளின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் ஜலசந்தியின் ஓமன் பகுதி வழியாக தாக்குதல் அபாயம் இன்றி கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும் என தெஹ்ரான் தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் சுமார் 20% போக்குவரத்தைக் கையாளும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் போக்குவரத்தைத் தடைசெய்ததன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கப்பல்களும் பிற கப்பல்களும், 20,000 மாலுமிகளும் வளைகுடாவிற்குள் சிக்கியுள்ளனர்.
ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு
ஏப்ரல் 8 அன்று இரண்டு வார கால போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. மேலும், போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறினார். இருப்பினும், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியப் பிரச்சினையாகவே நீடிக்கிறது.

இந்த நிலையில் தெஹ்ரானின் எந்தத் தடையுமின்றி, ஓமன் கடல் பகுதியில் உள்ள அந்த குறுகிய ஜலசந்தியின் மறுபக்கத்தைக் கப்பல்கள் பயன்படுத்த ஈரான் அனுமதிக்கத் தயாராக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமானி கடல்வழிப் பாதையில் கப்பல்களைத் தடையின்றிச் செல்ல அனுமதிக்கும் முன்மொழிவு பரிசீலனையில் இருந்து வந்ததாகவும், இருப்பினும் வாஷிங்டனிடமிருந்து இதுவரை ஏதேனும் பதில் வந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஒரு பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam