லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்களின் அறிவிப்பு
புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எல்பி எரிவாயு கையிருப்பு விநியோகம் இன்று (16.04.2026) முதல் மீண்டும் தொடங்கும் என எரிவாயு விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட முனையங்கள் வழியாக, கையிருப்பில் உள்ள 5000 மெட்ரிக் தொன் எரிவாயு இன்று சந்தையில் வெளியிடப்படும் என லாப்ஸ் கேஸ் பிஎல்சி (Laugfs Gas PLC) அறிவித்துள்ளது.
அத்துடன் லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனமும், தங்களது விநியோகப் பணிகள் இன்று முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என உறுதிப்படுத்தியுள்ளது.
சீரான விநியோகம்
நிறுவனம், நுகர்வோருக்கு சீரான விநியோகம் இருக்கும் என உறுதியளித்ததோடு, மே மாதம் வரை நீடிக்கும் அளவுக்கு போதுமான கையிருப்பு தற்போது உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, எல்பி எரிவாயு விநியோகம் தடையின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri