நீர்த்தேக்கங்கள் தொடர்பில் அரசின் தீர்மானத்தால் பாரிய ஆபத்து!
வலுசக்தியில் தற்போது ஏற்பட்டிக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர் வெளியேற்றலை முன்பை விட அதிகரிக்குமாறு அரசு தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானத்தை மீளபெற்றுக் கொள்ளுமாறு முன்னிலை சோசலிஷக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அக்கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தீர்மானத்தால் ஏற்படப்போகும் பாரிய ஆபத்து தொடர்பில் வெளிப்படுத்தினார்.அது தொடர்பில் அவர் விளக்கமளித்த போது
எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்து
கமத்தொழில் மற்றும் கால்நடைகள் அமைச்சினால் மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் குறித்த நீர் வெயியேற்றல் தொடர்பான தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சர் லால் காந்த ஆகியோர் கலந்த கொண்டிருந்துள்ளனர்.
இந்த தீர்மானத்தால் 7260 மில்லியம் ரூபா மின்சக்தி உற்பத்தியில் மீதப்படுத்தி கொள்ளலாம் எனவும் அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் 405 மில்லியன் கணமீட்டர் நீரின் மட்டம் பேணப்பட வேண்டும். குடிநீர் வழங்குவதற்காக குறித்த மட்டம் இருக்க வேண்டும்.

ஆனால் 330 கணமீட்டர் நீரை வெளியேற்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தால் தற்போதைய நிலையில் பலகொல்ல திகண குண்டசாலை போன்ற பகுதிகளில் பாரிய நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நீர் வெளியேற்றப்பட்ட பின்னர் நீர்த்தேக்கத்தில் 75 மில்லியன் கணமீட்டர் நீரே மீதப்படும்.அதில் மின்னுற்பத்தி செய்யப்படவுள்ளது.
எதிர்காலத்தில் எல்னினோ கடும் வரட்சியை ஏற்படுத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான தீர்மானங்கள் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்வதில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
தரமற்ற நிலக்கரி ஊழலை மறைக்க எடுக்கும் முயற்சியால் எதிர்பாராத பல நெருக்கடிகளை உருவாக்கப் போகும் அரசின் முட்டாள் தனமான தீர்மானங்களை மீள பெற்று கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri