விஜயின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் ஏற்படுமா..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பாதுகாப்பு கருதி அவருக்கு இந்தியாவின் அதிகூடிய பாதுகாப்பு பிரிவுகளில் ஒன்றான X பிரிவினை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த X பாதுகாப்பு பிரிவானது இந்தியாவில் பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் அதியுயர் பாதுகாப்பு பிரிவுகளில் ஒன்றாகும்.
தமிழகத்தில், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத் துறையின் அறிக்கை அடிப்படையில், SPG Z Plus, Z, Y+, Y, X என பல்வேறு வகையான பிரிவுகளின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
அதியுயர் பாதுகாப்பு
அந்தவகையில், தவெக தலைவர் விஜய்க்கும் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கரூரில் நடந்த விஜயின் பேரணியின் போது அவர் மீது பாதணிகள் எறியப்பட்ட விவகாரம் விஜயின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘Y’ பிரிவு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரிய நிலையில் விஜய்க்கான பாதுகாப்பு போதுமா அல்லது அதிகரிக்கப்பட வேண்டுமா என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விஜய்க்கு z பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க சி.ஆர்.பி.எப். தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியிருந்த நிலையில், இத்தகவல் வெளியாகி உள்ளதாக இந்திய செய்திகள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |