இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த எலோன் மஸ்க்கின் நிறுவனம்
உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் 'X' நிறுவனத்தின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Gork AI எனப்படும் 'X' சமூக வலைத்தளத்தின் செயற்கை நுண்ணறிவு பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள்
இதனையடுத்தே, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த செயற்பாடு பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என 'X' நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதள உள்ளடக்கங்களை நீக்க வேண்டுமானால் பிரிவு '69A' இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மட்டுமே நீக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |