லண்டன் ஹீத்ரோ விமான நிலைய முடக்கம்: இலங்கை விமான சேவையில் பாதிப்பு
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், இன்று இலங்கையில் இருந்து புறப்படவிருந்த மற்றும் இலங்கைக்கு வரவிருந்த இரண்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த கொழும்பிலிருந்து லண்டன் வரையான, UL 503 விமானம் மற்றும் இரவு 20:40 மணிக்கு வரவிருந்த லண்டனிலிந்து கொழும்பு வரையான, UL 504 விமானம் ஆகியன தடைப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் வரை பொறுமை மற்றும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அவசர தொடர்புகளுக்கு...
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தொடர்பில் விமான நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் ஹீத்ரோ மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கு விமானங்களை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சேவைகள் குறித்து உதவி தேவைப்படும் இலங்கைக்குள் உள்ள பயணிகள் 1979 என்ற எண் ஊடாகவும், வெளி நாடுகளில் உள்ள மக்கள் +94117 77 1979 அல்லது +94744 44 1979 என்ற எண்களின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது அவர்களின் பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |