தாக்குதலின் தீவிரம்! இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து முக்கிய நகர்வு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மூன்று கட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி போர் நிறுத்த முக்கிய மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் எகிப்து, ஆகிய தரப்புக்கள் குறித்த கூட்டு முயற்சிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறியுள்ளன.
முற்றுகையிடப்பட்ட பகுதியில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில், கட்டாரின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைப்பு முயற்சி
கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, எகிப்திய வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலட்டியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பு முயற்சிகள் மற்றும் காசாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து கவனம் செலுத்தும் ஐ.நா. பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
