வடக்கு மாகாண வூசு போட்டிகள் நடத்தாமை தொடர்பாக வெளியிடப்பட்ட அதிருப்தி
இந்த ஆண்டுக்கான வடக்கு மாகாண வூசு போட்டிகள் நடத்தாமை திட்டமிட்ட பக்கச் சார்பான நடவடிக்கை என பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண வூசு வீரர்கள் மற்றும் மாவட்ட வூசு சங்கத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் இடையே விளையாட்டு வீரர்களின் திறனை அதிகரித்தல், அனைத்து விளையாட்டிலும் சமனான விளையாடும் வீரரின் உரிமையை பேனுதல் மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் வருடந்தோறும் அணைத்து குழு மற்றும் தனி நபர் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.
அந்தவகையில், இந்த வருடமும் தனி நபர் விளையாட்டுக்கள் நடாத்தப்பட்ட போது, அனைத்து விளையாட்டுக்களும் முடிவுறும் நிலையில், வூசு விளையாட்டு நடத்தப்படவில்லை.
கடும் அதிருப்தி
வடக்கு மாகாண வீரர்கள் கடந்த காலங்களில் 3 வருடங்கள் தொடர்ச்சியாக தேசிய பதக்களை பெற்றதோடு இறுதி வருடம் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றிருந்தனர். இந்நிலையில், இந்த வருடம் இலகுவாக வடக்கு மாகாணத்திற்கு தேசிய பதக்கங்களை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் வூசு போட்டிகள் நடாத்தப்படாமையானது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு](https://cdn.ibcstack.com/article/31fed683-6381-44a4-b101-4677efa3c2c1/24-6684ecee2da04-sm.webp)
பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு News Lankasri
![பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு](https://cdn.ibcstack.com/article/fd5bacc6-2824-48e1-828b-159b273eba54/24-6685129c9f0c5-sm.webp)
பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு News Lankasri
![32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ](https://cdn.ibcstack.com/article/849ff1a3-72e9-4b7d-afd7-2b2dff704d9e/24-6684ee8b4c8e7-sm.webp)