பிரித்தானிய தேர்தலில் வழமைக்கும் மாறாக போட்டியிடும் ஈழத்தமிழ் வேட்பாளர்கள்

Sri Lankan Tamils United Kingdom World
By DiasA Jul 03, 2024 08:43 PM GMT
Report

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரித்தானிய பொதுத்தேர்தல் இன்று (04.07.2024) நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன்வாழ் ஈழத்தமிழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதன்படி இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட அறுவர் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

கடந்த காலத்தை விட தற்போது அதிகளவான குறிப்பாக 6 ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் மற்றும் டெவினா போல், கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன், த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா-ராஜன், லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் ஆகியோரே நடைபெறவிருக்கும் பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் இலங்கை பின்னணியைக்கொண்ட தமிழர்களாவர்.

அவர்கள் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தமது அணுகுமுறை மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு என்பன குறித்து வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் வருமாறு:

உமா குமாரன்

கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்களும், போரின் விளைவாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுமாவர்.

பிரித்தானிய தேர்தலில் வழமைக்கும் மாறாக போட்டியிடும் ஈழத்தமிழ் வேட்பாளர்கள் | Srilankan Tamils In Britain Election

'2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இற்றைவரை ஒருவர்கூட பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை நம்பமுடியவில்லை.

இப்போரின்போது இடம்பெற்ற உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் ஒருபோதும் மறவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் பட்சத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதையும், நீதியை நிலைநாட்டுவதையும் முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக சகல கட்டமைப்புக்களுடனும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவேன்.'

கெவின் ஹரன்

பிரித்தானியாவில் பிறந்த கெவின் ஹரனின் தந்தை யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவரும், 1970 களின் இறுதியில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தவருமாவார். 'யுத்தத்தின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும்.

இலங்கை உரோம் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தீர்மானமொன்றைக் கொண்டுவருவதன் ஊடாகவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தமுடியும்.

இவ்விடயத்தில் இராஜதந்திர அணுகுமுறை இன்றியமையாததாகும்.' நாராணி ருத்ரா-ராஜன் 'இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மிகமோசமான முறையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டபோதும், 2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடியின்போதும் பிரித்தானிய அரசாங்கங்கள் உரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளன.

இருப்பினும் எமது கட்சி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் அவசியமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்கும்'

டெவினா போல்

சமாதானம், அங்கீகாரம் மற்றும் நீதி என்பவற்றை அடைந்துகொள்வதற்கான தமிழர்களின் போராட்டத்தில் தொழிற்கட்சி எப்போதும் தோளோடு தோள் கொடுத்துவந்திருக்கின்றது.

பிரித்தானிய தேர்தலில் வழமைக்கும் மாறாக போட்டியிடும் ஈழத்தமிழ் வேட்பாளர்கள் | Srilankan Tamils In Britain Election

அதன்படி நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால் ஈழத்தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் எமது கட்சியின் ஏனைய தலைவர்களுடன் இணைந்து, அந்நோக்கத்தை முன்னிறுத்தி செயற்படுகிறேன்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

19 Jun, 2024
மரண அறிவித்தல்

Nashville, United States, Bethlehem, Pennsylvania, United States

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Stütze, Germany, Kingsbury, United Kingdom, Wigan, United Kingdom

14 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Fribourg, Switzerland

02 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, கனடா, Canada

05 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், London, United Kingdom

16 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுதுமலை

23 Jun, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Jul, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US