சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் உலக கிண்ண போட்டிகள் (Photos)

Badminton Switzerland
By Dias Apr 14, 2023 11:42 AM GMT
Report

சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரில் கடந்த 8ஆம் 9ஆம் திகதி இரண்டு நாட்களும் மிகவும் சிறப்பாக இறகுப்பந்துப் போட்டி நடைபெற்றுள்ளது.

இதில் அவுஸ்திரேலியா தொடக்கம் அமெரிக்கா வரையிலான தமிழ் மக்களின் பட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் சிறுவர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டோர் வரை ஆண்கள், பெண்கள் என இருபாலாறும் கலந்து சிறப்பித்துள்ளனர். 

இந்நிகழ்வு, கடந்த 08.04.2023 அன்று காலை 8 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து கொடிய போரினால் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் மௌன பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் உலக கிண்ண போட்டிகள் (Photos) | Wtbt Swiss 2023

பாராட்டு

விசேடமாக 2018ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 7ஆம் உலக கிண்ணப் போட்டியின் பின்னர் நிரந்தரமாக உலகை விட்டு அகன்ற உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களான மோகன் (பிரான்ஸ்) பாலா அண்ணா (பிரான்ஸ்) நிம்மி என்று அழைக்கப்படும் நிர்மலன் (பிரித்தானிய) ஆகியவர்களிற்கு மலர்கள் தூவி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.

கலாநிதி அகளங்கன் இயற்றிய தமிழ்த்தாய் கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது, உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் தலைவர் தங்கராஜா சிவசிறி, தலைமை உரையாற்றியுள்ளதுடன், அனைத்து வீரர்களையும் வரவேற்றுள்ளார்.

நடைபெற்ற இந்த மைதானமானது 24 விளையாட்டு தளங்களைக் கொண்ட மிகப்பெரிய மைதானமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தினை பெற்றுத்தருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அதற்குப் பொறுப்பாக இருந்த சுவிஸ் நாட்டு விளையாட்டுத்துறையின் உயர் நிர்வாகிகளான தோமஸ் அவரது துணைவியார் பிறிஸ்கா ஆகியோர் மிகவும் நன்றியுடன் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் உலக கிண்ண போட்டிகள் (Photos) | Wtbt Swiss 2023

சிறப்பு அதிதி

அதனைத் தொடர்ந்து, இந்த போட்டியின் தலைவரான ரோமான், போட்டி தொடர்பான விசேட விடையங்களை வீரர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

தொடர்ச்சியாக உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் சிறப்பு உரையாற்றியுள்ளார்.

இதேபோல், தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ். மேயர் ஆனோல்டும் உரையாற்றி உரை நிகழ்த்தியுள்ளார். 

2014ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழர் ஒப்பந்தாட்ட பேரவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ நாராயணதாசும் இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு நாட்டு வீரர்களும் குழு தமது நாட்டு வீரர்கள் அனைவரும் இணைந்து குழு ரீதியாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். 

சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் உலக கிண்ண போட்டிகள் (Photos) | Wtbt Swiss 2023

சர்வதேச சமூகம்

250  போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த மாபெரும் உலக கிண்ணம் மிகவும் பெறுமதியான பல வீரர்களை ஒன்று திரண்டு சங்கமித்திருந்தனர்.

குறிப்பாக இந்த வருடம் தமிழ் மக்கள் அல்லாதவர்களும் கலந்து கொள்கின்ற சர்வதேச சமூகத்தினருக்கான சிறப்புப் பிரிவும் இடம்பெற்றுள்ளது. இதில் சர்வதேச தரத்தில் இருக்கும் பலர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

சிறுவர்கள், பெண்கள், முதியோர் போன்றோரின் விளையாடுத் திறன்களைப் பார்த்த பார்வையாளர்கள் தங்களை வியப்படைய வைத்ததாகப் பேசிக் கொண்டார்கள்.

சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் உலக கிண்ண போட்டிகள் (Photos) | Wtbt Swiss 2023

WTBTஇன் நிர்வாகத் திறன்

WTBTஇன் நிர்வாகத் திறனை அவதானித்த பலரும் வெளிப்படையாகப் பாராட்டியதை அவதானிக்க முடிந்தது. 

சுமார் 15 மணிக்குப் போட்டிகள் யாவும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள், பணப் பரிசில்கள் என வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரிசளிப்பு வைபவம் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை அதே மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும், விளையாடு வீரர்கள் அவர்கள் உறவினர்கள் என சுமார் 400 பேர்வரை வேறு ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடி, இரவு உணவினை உண்டு களித்து ஆடிப்பாடி அதிகாலை ஒரு மணிவரை மனமகிழ்ந்துள்ளதுடன் 8ஆவது WTBT-2023 போட்டி நிகழ்வு இனிதே நிறைவடைந்துள்ளது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US