தேர்தல் திணைக்கள விடுதியில் இருந்து சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை
மட்டக்களப்பு நகரில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் விடுதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(30.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக
களுவாஞ்சிகுடியை சேர்ந்த குறித்த நபர் தேர்தல் திணைக்களத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கடமையாற்றிவந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் எருவில் பகுதியை சேர்ந்த 35வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிவான் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri