வட மாகாண கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கட்டளைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தானை மனு தள்ளுபடி
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் இடமாற்ற கட்டளைக்கு எதிராக கிளிநொச்சி மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தானை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலய ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்ற கட்டளைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரியும், குறித்த இடமாற்ற கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரியும், எழுத்தாணை மனு கிளிநொச்சி மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் ஆசிரியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
தவணையிடப்பட்ட வழக்கு

குறித்த எழுத்தானை மனு கடந்த வருடம் அக்டோபர் மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இடமாற்றத்திற்கு எதிராக இடைக்கால தடை வழங்கப்பட்ட நிலையில் வழக்கு தவணையிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் (04.11.2026) வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதவான் தர்மரட்ணம் கருணாகரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.