மூன்றாம் உலக போருக்கு வழிவகுத்துவிடும்! - உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையே 27வது நாளாக போர் நீடித்துள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த தொடர் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரடியாகப் பேசத் தயாராக இருக்கிறேன், போர முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள்தான் ஒரே வழி என்று நம்புகிறேன். “ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையின் தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும்.
உக்ரைன் நேட்டோ உறுப்பினராக இருந்தால், இந்த போர் தொடங்கியிருக்காது என்று தான் நம்புகிறேன்.
நேட்டோ உறுப்பினர்கள் எங்களை கூட்டணியில் பார்க்க தயாராக இருந்தால், அதை உடனடியாக செய்யுங்கள். ஏனென்றால், மக்கள் தினந்தோறும் இறக்கின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.