இலங்கையின் மோசமான நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோவிட் வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் எவ்வித கருத்து அல்லது தரவுகளை முன்வைத்தாலும் இலங்கை மிகவும் மோசமான மட்டத்தில் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை சாதாரமாக அல்லது இலகுவாக எண்ண வேண்டாம் என மீண்டும் அரசாங்கத்திற்கும் சுகாதார பிரிவுகளுக்கும் தெரிவித்துக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது முதலாவது கோவிட் அலை போன்று சாதாரணமான ஒன்று அல்ல எனவும் மிகவும் பயங்கரமான அலை எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் நாட்களில் பாரிய ஆபத்தான அளவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுப்பததற்கான உடனடி வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகள் அதிகரிப்பதனால் அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாகவும் அந்த தாமத்தை உடனடியாக தீர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri