குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை முற்றிலும் உண்மை! ரவிகரன்

Raviharan MP
By Independent Writer Feb 01, 2021 03:54 AM GMT
Report

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மையானது என்ற விடயத்தினை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸாருக்கு நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார்.

குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அண்மையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்த நிலையில், அவ்விடயத்தினை உறுதிப்படுத்த வேண்டுமென பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருந்தூர் மலையில் இருந்த முச்சூலம் உட்பட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தமிழ் மக்கள் சென்று வழிபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலே அப்பகுதி மக்களும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் நிர்வாகத்தினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 27.01.2021 புதன் கிழமையன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் குருந்தூர் மலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக 27.01.2021 அன்றைய தினமே முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குருந்தூர்மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும், தமிழ் மக்களின் வழிபாட்டிற்கு தடை விதிக்கின்றமை தொடர்பிலும் அப்பகுதிக் கிராம மக்களின் சார்பாக முறைப்பாட்டினைப் பதிவு செய்திருந்தார்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் இருந்த இடத்தில் நிறுவப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாகக் கோரியிருந்தார்.

அந்த வகையில், பொலிஸார் முறைப்பாட்டினையும், முறைப்பாட்டோடு தொடர்புடைய ஆதாரங்களையும் பெற்றுக்கொண்டனர்.அத்தோடு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குருந்தூர் மலையில் இருந்த முச்சூலம் உட்பட தமிழ் மக்களின் வழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பிறிதொரு நாளில் தாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அப்போது முறைப்பாட்டாளரான ரவிகரன் குருந்தூர் மலைக்கு வரவேண்டுமென பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றைய தினம் பொலிஸாரோடு, முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன்

ஆகியோர் குருந்தூர் மலைக்குச் சென்று அங்கு தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதை பொலிஸாருக்கு உறுதிப்படுத்தியிருந்தார். அப்போது குருந்தூர் மலைப் பகுதிக்குள் முறைப்பாட்டாளரான ரவிகரன் மற்றும் அவருடன் மேலும் ஒருவர் மாத்திரமே செல்ல பொலிஸாரால்அனுமதிக்கப்பட்டதுடன், மலைப்பகுதியில் காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US