கோவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள்
நாஉல - அம்பன சிகிச்சை நிலையத்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் புழுக்கள் உள்ளதென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாஉல - அம்பன பிரதேசத்தில் கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தனிமையாக அறை தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொகுதியினுள் மாத்தளை மாவட்ட கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பபடுகின்றது.
அந்த நோயாளிகளுக்கு வைத்தியசாலையின் கண்கானிப்பின் கீழ் உணவு வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர். அந்த உணவுகளில் புழுக்கள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாத்தளை மாவட்ட சுகாதார பணிப்பாளர் சமிந்த வீரகோனவிடம் வினவிய போது, நோயாளிகள் தன்னிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமுலுக்கு வரும் வகையில் அதற்கு தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
