உலகின் பணக்கார அரசியல் தலைவர்களில் புடினுக்கு கிடைத்த இடம்!
தனியார் நிறுவனம் ஒன்று உலக அரசியல் தலைவர்களில் யார் அதிக பணக்காரர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியலுக்கமைய உலக அளவில் நன்கு அறியப்பட்ட மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பல ஆண்டுகளாக நீடித்து வரும் விளாடிமிர் புடின், உலக பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.
புடினின் சொத்து மதிப்பு
ஜனாதிபதி புடினின் சொத்து மதிப்பு சுமார் 70 முதல் 200 பில்லியன் டொலர்களாக இருக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக 12 ஆண்டுகள் இருந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு சுமார் 76.8 பில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது மற்றும் ஐந்தாவது
மேலும் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த துபாயின் ஜனாதிபதி விவகாரங்களுக்கான துணை பிரதமர் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் பெற்றுக்கொண்டுள்ளார்.
நான்காவது மற்றும் ஐந்தாவது பணக்கார அரசியல் தலைவர்கள் வரிசையில், பிலிப்பைன்ஸின் இமெல்டா மற்றும் வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடம் பெற்றுள்ளனர்.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
