உலகில் மிக நீண்ட கால ஜனாதிபதி:மீண்டும் தேர்தலில் வெற்றி!
உலகின் மிக நீண்ட காலம் ஜனாதிபதியாக இருந்த எக்குவடோரியல் கினியா நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தனது சர்வாதிகார ஆட்சிக்கு தலைமை தாங்குகியுள்ளார்.
யார் இந்த தியோடோரோ ஒபியாங் நுகுமா
80 வயதான ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா எம்பாசோகோ கிட்டத்தட்ட 95 சதவீத வாக்குகளைப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்களிப்பு இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் எங்கள் ஆட்சி மீண்டும் சரியானது என்பதை நிரூபிக்கின்றது என்று ஜனாதிபதியின் மகனான துணை ஜனாதிபதி தியோடோரோ நுகுமா ஓபியாங் மாங்கு கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஓபியாங் எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆப்பிரிக்க தேசத்தின் மீது வலுவான பிடியைக் கொண்டுள்ளார், முக்கிய அரசாங்கப் பதவிகளில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர் 1979 இல் இராணுவத்தை கைப்பற்றிய பின்னர் ஆட்சிக்கு வந்தார். பல சதி முயற்சிகளில் இருந்தும் தப்பியுள்ளார்.
நாட்டின் அனைத்து ஒளிபரப்பு ஊடகங்களும் அரசாங்கத்திற்கு முற்றிலும் சொந்தமானவை அல்லது அரசாங்கத்துக்கு நெருங்கியவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், அரசியல் எதிர்ப்பு, ஊடகங்களில் கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மனித உரிமை மீறல்கள் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை மறுத்த ஜனாதிபதி ஓபியாங், தனது சர்வதேச நற்பெயரை பெற, தனது ஆறாவது பதவிக்காலத்தை பயன்படுத்த விரும்புவதாக கருதப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பரில், அரசாங்கம் மரண தண்டனையை இரத்து செய்தமையை ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டப்பட்டியுள்ளது.
எனினும் எக்குவடோரியல் கினியாவில் மோசடியான தேர்தல் முடிவுகளே
வெளியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறும் வரலாறு இந்த தடவையும் தொடர்கிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
