அமெரிக்க நீதிமன்றில் முன்னிலை.. மதுரோவின் மகனின் அவசர அறிவிப்பு
நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலை ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், நிக்கோலஸ் மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா மீதும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற குற்றப்பத்திரிகையில் அவரை "இளவரசர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துரோகிகள் யார்..
இருப்பினும், அவர் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டினை மட்டுமே அமெரிக்கா முன்வைத்துள்ளது.

இந்நிலையில், அவரது தந்தையின் கைது குறித்து சமூக ஊடகங்களில் ஒரு கருத்து காணொளியில் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவின் "நீங்கள் எங்களை தெருக்களில் பார்ப்பீர்கள்" என்று நிக்கோலஸ் மதுரோ குவேரா காணொளியில் கூறுகிறார். "துரோகிகள் யார் என்பதை வரலாறு சொல்லும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.