கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு
கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார்.
கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார்.
தேர்தல்களில் சீனாவின் ஆதரவு
கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ஒன்றை கனேடிய புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இவ்வாறு கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு கனடாவின் சமஷ்டி தேர்தல்களில் குறைந்தபட்சம் 11 பேர் சீனாவின் ஆதரவைப் பெற்றிருந்தனர் என ஜஸ்டின் ட்ரூடோவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
பல வேட்பாளர்களுக்கு சீனா பணம் வழங்கியதகாவும், சில வேட்பாளர்களின் பிரச்சார ஆலோசகர்களாக சீனர்கள் செயற்பட்டதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனத் தூதரகம்
ஒன்டாரியோவை தளமாகக் கொண்ட மாகாண சட்டசபை உறுப்பினர் ஒருவருககு ஊடாக 250,000 கனேடிய டொலர் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொரண்டோவிலுள்ள சீனத் தூதரகத்திலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கொள்கைளில் செல்வாக்கு செலுத்துவதற்காக, பதவியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் தமது செயற்பாட்டாளர்களை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.