யாழ்.பல்கலையில் நாளை உலக நாடக விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது நாளை (27.03.2024) காலை 10 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மாணவர்களின் நாடகங்கள்
யாழ் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் சிறப்பு விருந்திராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ள உலக நாடக தினவிழாவில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களின் நாடகங்கள் மற்றும் தொழில்வாண்மை நாடகக் கலைஞர்களின் நாடகங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்நாடக விழாவில் பங்கேற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan