வலுவான நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணி
இலங்கை அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையிலான நான்கு நாள் பயிற்சிப் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.
இந்த பயிற்சி ஆட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று (16) போட்டி நிறைவடையும் பொது, 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 02 விக்கெட் இழப்பிற்கு 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன்படி, போட்டியில் வெற்றி பெற இன்னும் 75 ஓட்டங்கள் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு தேவை படுகிறது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
லயன்ஸ் அணி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதன்படி, 185 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த ஆட்டத்தில் நிஷான் மதுஷ்க 77 ஓட்டங்களையும் , தனஞ்சய டி சில்வா 66 ஓட்டங்களையும் , ஏஞ்சலோ மேத்யூஸ் 51 ஓட்டங்களையும் அணைக்காக பெற்றுக்கொடுத்தனர்.
எனினும், முதல் இன்னிங்ஸில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் வெளிப்படுத்திய துடுப்பாட்டப் பாணியால், இப்போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முன்னிலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam