ஐசிசி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ள அவுஸ்திரேலியா
போர்டர்- கவாஸ்கர் கிண்ண நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெற்றி கொண்ட நிலையில், ஐசிசி செம்பியன்சிப் டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி, மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
நேற்று வரை 58.89 புள்ளிகளை கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணி, இன்றைய(30.12.2024) வெற்றியின் பின்னர் 61.46 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு தென்னாபிரிக்க அணியுடன் மோதும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணி அதிகரித்துள்ளது.
அணிகளின் புள்ளிகள்
மறுபுறத்தில் இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு மிகவும் பின்னடைந்துப் போயுள்ளது. தற்போதைய நிலையில் தென்னாபிரிக்க அணி, புள்ளிப்பட்டியலில் 66.67 புள்ளிகளை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி, 61.46 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்திய அணி, 52.78 புள்ளிகளை பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணி 48.21 புள்ளிகளையும், இலங்கை அணி 45.45 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri