உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்
உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas), தனது 116 வயதில் காலமானார்.
தெற்கு பிரேசிலிய மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் 1908 ஜூன் 8 ஆம் திகதி அவர் பிறந்தார் இனா கனபரோ லூகாஸ், தனது 20 களின் முற்பகுதியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரியானார்.
ஆயுளுக்கு இரகசியம்
அவர், தனது பிறந்தநாளை தனக்கு பிடித்த விளையாட்டுக்கழகமான இன்டர்நேசனல் - போர்டோ அலெக்ரேவின் கால்பந்து அணியுடைய அரங்கத்தின் வடிவத்தில் ஒரு கேக்குடன் எப்போதும் கொண்டாடி வந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தீவிர கால்பந்து ரசிகையான அவர், தனது 116வது பிறந்தநாளை தனக்குப் பிடித்த அணியின் சின்னத்தை அணிந்து கொண்டாடியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸால் ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரி இனா, கடவுளே தனது நீண்ட ஆயுளுக்கு இரகசியம் என்று கூறி வந்துள்ளார்.
காலமானார்
இந்தநிலையில், சகோதரி இனாவின் மறைவை அடுத்து, தற்போது வாழும் வயதானவர் என்ற பட்டம் இங்கிலாந்தின் சர்ரேயைச் சேர்ந்த 115 வயதான எத்தேல் கேட்டர்ஹாம் என்பவருக்கு செல்கிறது.
116 வயதான சகோதரி இனாவுக்கு எந்த நோயும் இல்லை, ஆனால் அவரது உடல் படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்று அவரது மருமகன் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
