உலகின் முதல் நைதரசன் வாயு மூலமான மரண தண்டனை - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் அலபாமாவில் நைதரசன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடுமைப்படுத்துவதற்கு சமம் என ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த மத போதகர் சார்லஸ் சென்னட், அவரது மனைவி எலிசபெத்தை கடந்த 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி கொலை செய்திருந்தார். கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த சார்லஸ், தனது மனைவியின் பெயரில் இருந்த காப்பீட்டு பணத்தை அடையும் நோக்கில் கென்னத் ஸ்மித் மற்றும் ஜான் பாரஸ்ட் பார்க்கர் ஆகிய இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கொடுத்து எலிசபெத்தை கொல்ல உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, எலிசபெத்தின் கணவர் சார்லஸ் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்குள் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான ஜான் பாரஸ்ட் பார்க்கருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கெனத் ஸ்மித் எனும் மற்றைய குற்றவாளிக்கு இன்று நைதரசன் வாயுவைக் கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில், நைதரசன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் வோல்கர் டர்க் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இதற்கு முன்னர் சோதித்துப் பார்க்காத முறையில் கெனத் ஸ்மித்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது கொடுமைப்படுத்துவதற்கு ஈடாகலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
