சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு உலக நாடுகள் அதிரடி கட்டுப்பாடு!
சிறுவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் மோசமான தாக்கங்கள் குறித்த கவலைகள் உலகளவில் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக, அவுஸ்திரேலியா முதல் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகள் வரை பல நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடந்த 2025 டிசம்பரில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ரிக்ரொக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதன்முறையாக அவுஸ்திரேலியா தடை விதித்தது.
சமூக ஊடகத் தடை
இதனைப் பின்பற்றி, பிரித்தானிய அரசு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை அங்கீகரித்து, 2027 வசந்த காலத்தில் அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு இராச்சியம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்து இன்று(18.6.2026) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் இத்தகைய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்த முதல் அரபு நாடு என்ற பெருமையை அமீரகம் பெற்றுள்ளது.
சட்டம்
இதர நாடுகளைப் பொறுத்தவரை, சீனா வயது வாரியான திரை நேரக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், நோர்வே, போலந்து, ஸ்லோவேனியா, சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதிக்க சட்டம் இயற்றி வருகின்றன அல்லது பரிந்துரைத்துள்ளன.

ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்டோருக்கும், ஜெர்மனி மற்றும் இத்தாலியில் 13 முதல் 16 வயதுடைய சிறுவர்களுக்கும் பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த ஜூன் 1 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கணக்குத் தொடங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam