சாதனை படைத்த தென்னாபிரிக்கா: இங்கிலாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
50 ஓவர் உலக கிண்ணம் இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 399 ஓட்டங்களை பெற்று இந்த தொடருக்கான ஒரு அணியின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை படைத்துள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அடின் மக்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை இன்று (21.10.2023) எதிர்கொண்டது.
இங்கிலாந்து அணி
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 399 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிச் கிளாசென் அதிகபடியாக 109 ஓட்டங்களையும், ரீசா ஹென்றிக்ஸ் 85 ஓட்டங்களையும், ஸ்ஸி வான் டெர் டுசென் 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ரீஸ் டோப்லி 3 விக்கெட்டுக்களையும், கஸ் அட்கின்சன், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி இங்கிலாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டில் ஒரு பாதி.....! நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்து - செய்திகளின் தொகுப்பு

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
