உலக சாதனை படைத்த யாழ்ப்பாணத்தவர் - செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் - தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.
7 நிமிடம் 48 செக்கன்களில் 1550 கிலோ எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்தே இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (09.07.2023) பிற்பகல் தென்மராட்சி-மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் பிரதம விருந்தினராகத் தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்து சாதனை நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri