8 பில்லியனை தொடும் உலக மக்கள் தொகை - ஐ.நா அறிவிப்பு!
எதிர்வரும் 15ஆம் அன்று, உலக மக்கள் தொகை 8 பில்லியன் எண்ணிக்கையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 அறிக்கையில் இந்த கணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்வடைந்துள்ள உலக மக்கள் தொகை
உலக மக்கள்தொகை 7 பில்லியனில் இருந்து 8 பில்லியனாக வளர 12 வருடங்கள் எடுத்துக் கொண்டாலும், அது 9 பில்லியனை எட்டுவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நமது மனித குடும்பம் பெரிதாக வளரும்போது, அது மேலும் பிளவுபடுகிறது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
பில்லியன் கணக்கானவர்கள், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர். மேலும் கடன், கஷ்டங்கள், போர்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து நிவாரணத்திற்காக வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அதிக எண்ணிக்கையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
ஒரு சில பில்லியனர்கள் உலகின் ஏழ்மையான பகுதியினரின் செல்வத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், அதே சமயம் ஒரு சதவீதம் பேர் உலக வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நிலவரப்படி, உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஆசியாவில்
வாழ்கின்றனர், இந்தியாவும் சீனாவும் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில்
பெரும்பாலான மக்கள் தொகையை உருவாக்குகின்றன.





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
