வெனிசுவேலாவின் மற்றொரு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
வெனிசுவேலாவின் மற்றுமொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவினால் இதுவரையில் இந்த ஆண்டில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆறாவது எண்ணெய் கப்பல் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டர் டாங்கர் வெரோனிகா என்ற கப்பல், கரீப்பியன் கடலில் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதை போன்ற ஆறு கப்பல்கள்
கப்பல் திட்டமிட்டிருந்த கரீப்பியன் கடல் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்டது எனவும் அதனால் அதிரடி நடவடிக்கையாக கைப்பற்றப்பட்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு, வெனிசுவேலாவின் எண்ணெய் விற்பனை, சீர்திருத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நோக்கங்களின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்கிறது.
இதுவரை இதை போன்ற ஆறு கப்பல்கள் அமெரிக்க படைத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“வெனிசுவேலாவிலிருந்து வெளியேறும் எண்ணெய், சரியான மற்றும் சட்டபூர்வமான முறையில் வெளியேறுவதனை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.