மரண தண்டனை தொடர்பாக வெளியான செய்திகளை முற்றாக மறுக்கும் ஈரான்
ஈரானில் நடந்து வரும் மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 26 வயதான எர்ஃபான் சொல்தானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக வெளியான செய்திகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நோர்வேயை தளமாகக் கொண்ட 'ஹெங்காவ்' (Hengaw) என்ற மனித உரிமை அமைப்பு, எர்ஃபான் சொல்தானிக்கு கடந்த புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்ததாகவும், பின் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
ட்ரம்பின் சமூக வலைதள பதிவு
இந்த நிலையில் எர்ஃபான் சொல்தானி மீது "தேசிய பாதுகாப்புக்கு எதிராக சதி செய்தல்" மற்றும் "அரசுக்கு எதிரான பிரசாரம்" ஆகிய குற்றச்சாட்டுகள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கு மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும் ஈரான் நீதித்துறை விளக்கியுள்ளது.

இது ஒரு "திட்டமிட்ட போலிச் செய்தி" என்றும் ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினால் ஈரான் மீது மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
தற்போது மரண தண்டனை இல்லை என்ற செய்தியை அடுத்து, "இது நல்ல செய்தி, இது தொடரும் என்று நம்புகிறேன்" என ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |