முன்னாள் போராளிகளை போஷித்தவருக்கு உயரிய விருது !!
முன்னாள் போராளிகளையும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் போசித்து அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்துவந்த ஒரு மதத் தலைவருக்கு சர்வதேச மட்டத்தில் ஒரு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு எத்தகைய சுய விளம்பரம் இல்லாமல் அமைதியாக பணி புரிந்த இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவைத்தலைவர் அருட்பணி வில்லியம் பிரேம்குமார் எபனேசர் யோசப் அவர்களுக்கே உலக மெதடிஸ்த திருச்சபை சமாதான விருது 2022 வழங்கப்பட இருக்கின்றது.
இந்த விருது முதல் தடவையாக ஆசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அருட்பெரும் சமாதானத்துகும் நீதிக்குமான பணியை கௌரவிக்கும் முகமாக உலக மெதடிஸ்த திருச்சபை மன்றத்தினால் அந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.
அருட்பணி பிரேம்குமார் எபனேசர் இனம், சமயம், மொழிகள், முதலானவற்றை கடந்து சர்வ சமய தலைவர்களுடன் சமய உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தி தோழமையுடனும் திறந்த மனதுடனும் நம்பிக்கையோடும் எதிர் நோக்குடனும் சர்வ சமய உரையாடலை மேற்கொண்டதுடன், சமூகத்தில் கிராமம், நகரம், எல்லை கிராமம் ஆகிய வேறுபாடுகளை கடந்து நாட்டின் சமாதானத்திற்கும் நீதிக்கும் நல்லிணக்கத்திற்கும் ஊக்கியாக செயற்பட்டு மனித மாண்பை கட்டியெழுப்புவதில் முன்னின்று உழைத்ததுவருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனங்களுக்கிடையில் பகைமை வளர்ந்த காலங்களில் பகைமைகளை அழித்து மனிதத்துவத்துடன் இணைந்து வாழ உறுதியான பணிகளை மேற்கொண்டதுதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு எத்தகைய சுய விளம்பரம் இல்லாமல் அமைதியாக பணி வருகின்றார்
இவரது சமாதானத்திற்கான திருப்பணியை ஏற்புடமை செய்த அகில உலக மெதடிஸ்த கிறிஸ்தவ மன்றம் 2022ஆம் ஆண்டிற்கான சமாதான விருதிற்காக பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அருட்பணி வில்லியம் பிரேம்குமார் எபனேசர் யோசப் இவ் உயரிய விருதை பெறும் முதலாவது இலங்கையர் என்பதோடு முதலாவது ஆசியா கண்டத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.