தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்! தொடர்ந்தும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 156,300 ரூபா என்ற நிலையில் தொடர்ந்து வந்தது.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.
இன்றைய தினத்திற்கான தங்கவிலை நிலவரம்
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக காணப்படுகிறது.
டொலரின் பெறுமதி
இதேவேளை இன்று (08.08.2023) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும், விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளது.
எனினும் நேற்றைய தினத்திற்கான (07.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.57 ரூபாவாகவும், கொள்வனவு விலை 315.05 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
அதன்படி பார்க்கும் போது நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்திற்கான டொலரின் பெறுமதியானது சிறியளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இவ்வாறான சூழலில் கடந்த சில நாட்களாகவே டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.