170000 ரூபாவை அடைந்தது தங்கத்தின் விலை - இரண்டு இலட்சத்தை தொடுமா..! தங்க வாங்கவுள்ளோருக்கான செய்தி
செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது 160,000 ரூபாவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவை தொட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான நிலவரம்
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வரும் அதேவேளை பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |