திடீரென ட்ரம்புக்கு எதிராக திரும்பிய உலகத் தலைவர்கள்..!
காலநிலை மாற்றத்தை மறுத்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உலகத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
'COP30' உச்சிமாநாடு பிரேசிலின் பெலெமில் ஆரம்பித்துள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இந்த மாநாட்டை ட்ரம்ப் தவிர்த்துள்ள நிலையில், அவர் பொய்களைப் பரப்புவதாகவும், காலநிலைக் கொள்கைகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிப்பதாகவும் உலகத் தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மோசமான வானிலை
இதேவேளை, காலநிலை நடவடிக்கையில் உலகளாவிய ஒற்றுமை மறைந்து வருவதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் பல வாரங்களாக நீடித்த மோசமான வானிலைக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மெலிசா சூறாவளி சமீபத்தில் கரீபியனின் சில பகுதிகளை அழித்து, 75இற்கும் மேற்பட்டவர்களைக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |