தாயகம் திரும்பியது ஆர்ஜென்டீனா அணி
2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஆர்ஜென்டினா அணி நேற்று (21.12.2022) தாயகம் சென்றடைந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி கத்தாரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸை பெனல்டி முறையில் 4:2 கோல்கள் விகிதத்தில், தோற்கடித்து ஆர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
தலைநகர் புவனேர்ஸ் அயர்ஸஸிலுள்ள எஸேய்ஸா விமான நிலைத்தை நேற்று (21.12.2022) ஆர்ஜென்டினா அணியினர் சென்றடைந்துள்ளனர்.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வெற்றி
அதன்பின் திறந்த பேருந்து மூலம், விமான நிலையத்திலிருந்து ஆர்ஜென்டினா கால்பந்தாட்டச் சங்கத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது ஆர்ஜென்டினா கால்பந்தாட்டச் சங்க கட்டடத்தொகுதியில் தங்கவைக்கப்பட்ட அணியினர் தலைநகரில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடுவதற்காக நேற்று ஆர்ஜென்டினாவில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை பல கோடி மக்கள் சேர்ந்து கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
