இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள பாராட்டு
இலங்கையின் கொவிட் எதிர்ப்பு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இலங்கை முழுவதிலும் சுமார் ஐந்து லட்சம் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஒரே நாளில் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த்துக் கொள்வதாக இலங்கை சுகாதார அமைச்சிற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 418,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் முதல் மாத்திரையாக வழங்கப்பட்டுள்ளதுடன், 56738 பேருக்கு இரண்டாம் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
38430 பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 2168 மொடர்னா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
