ஐரோப்பாவின் கோவிட் நிலவரம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் மார்ச் மாதத்திற்குள் மேலும் 700,000 பேர் கோவிட் தொற்றால் இறக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் அதன் ஐரோப்பா பிராந்தியமாகக் குறிப்பிடும் 53 நாடுகளில் ஏற்கனவே 1.5 மில்லியன் கோவிட் இறப்பு எண்ணிக்கையை தாண்டியுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கிரீஸ் உட்படப் பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதினாலும் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் பல நாடுகள் புதிய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகளைக் கண்டுள்ளன. நெதர்லாந்து பகுதி பூட்டுதல் காரணமாகப் பல இரவுகளில் கலவரங்களைக் கண்டுள்ளது.
இருப்பினும் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி இத்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதன் மூலம் இவ்வாறான இறப்புகளைக் குறைத்துக்கொள்ளலாம்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
