உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பல மாவட்டங்களில் சிரமதானபணி முன்னெடுப்பு (Video)
கொழும்பு 15 பகுதியில் அமைந்துள்ள காக்கைத்தீவு கடற்கரையில் சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியானது இன்று (05.06.2023) காலை 8 மணி முதல்11 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு சூராடோ வளாகம், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
இதில் சூராடோ கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கமைய எதிர்வரும் 08ஆம் திகதி காலை 8 மணி முதல்11 மணி வரை இதே பகுதியில் மீண்டுமொரு சிரமதான பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், மரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் நேற்று (05.06.2023) மதியம் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை இடம்பெற்றதுடன், அதனைத் தொடாந்து சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.
தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் சூழல் பாதுகாப்பு தொடர்பான படங்களையும், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்ததுடன், பொதுக்களுக்கு மரநடுகைக்கான மரங்களையும்
கல்லூரி வாயிலில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான குறியீட்டு நடாகம் ஒன்று ஆசிரிய மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் நேற்றையதினம் (05.06.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அறிவொளி நிகழ்ச்சியை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை ‘பிளாஸ்ரிக் மாசைத் தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது.
இக்கருப்பொருளுக்கு அமைவாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு, பங்கேற்ற மாணவர்களுக்கு ‘பிளாஸ்ரிக்கின் பிடியில்’ என்ற கைநூலையும்; வழங்கி வைத்துள்ளார்.
அத்தோடு, ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு மாணவர்கள் அனைவருக்கும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி-கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
