இரு நாடுகளை தவிர ஏனைய வல்லரசு நாடுகளுக்கு IMF விடுத்துள்ள எச்சரிக்கை
2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி அடையும் சந்தைகளை பார்க்கும் போது ஆசியா தான் மிகவும் பிரகாசமாக உள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,“முக்கியமாக இந்தியா மற்றும் சீனா 2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனைய சந்தைகள் சரிவு பாதையில் உள்ளது.
எனவே 2023 ஆம் ஆண்டில் வல்லரசு நாடுகள் மந்தமான பொருளாதார வளர்ச்சியால் பாதிக்கவுள்ளன.
உலக பொருளாதார சிக்கல்
முக்கியமாக அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகள் அளவுக்கு அதிகமாக உள்ளது.
வட்டி விகித உயர்வில் தொடங்கி பணவீக்கம், பணிநீக்கம், வேலைவாய்ப்பு, பிராந்திய வங்கிகளின் நிலையற்ற தன்மை எனப் பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக உள்ளது.
இதேபோன்று ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையும் ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
வல்லரசு நாடுகள் இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும்.”என எச்சரிக்கை விடுத்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
