கதவடைப்பு நடவடிக்கையை கண்டு அஞ்சும் அநுர அரசு: தமிழரசுக்கட்சிக்கு எதிராக சதித்திட்டம் - சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழுமையான கதவடைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஒரு பாரிய சவாலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,'' இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை(18) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழுமையான கதவடைப்பு போராட்டமானது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாகவே அமையும்.
இந்த அரசாங்கம் பதவியேற்ற ஒரு வருட காலத்திற்குள் இவ்வாறான ஒரு போராட்டம் முன்னெடுப்பது அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும்.
கதவடைப்பு போராட்டத்திற்கு சில காட்சிகள் தமது கட்சிகளின் கொள்கைகளுக்கமைய ஆதரவு வழங்கியுள்ளதுடன் சிலர் ஆதவளிக்க மறுத்துள்ளனர்.''என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ள முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்...,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்




